பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே சோம் சேகர் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென தற்போது இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சோம்சேகர், அன்பு குரூப்பில் இருந்தாலும் ரம்யாவிடம் மட்டும் அவ்வப்போது நெருக்கம் காட்டி வந்தார். ரம்யாவும் அவரும் நெருக்கமாக மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்த பல காட்சிகளை பார்த்தோம்
இந்த நிலையில் சோமசேகர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியபோது ரம்யாவுக்கு சாக்லேட் கவர் கொடுத்துவிட்டு வெளியேறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாகவும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் வதந்திகள் பரவியது
இந்த நிலையில் திடீரென சோம்சேகர் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டது என்றும் உண்மையில் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்றும் இருவரும் நண்பர்களாகவே உள்ளனர் என்றும் இரு தரப்பினர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்