Connect with us

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘மன்னன்’ பட டப்பிங்கா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ‘மன்னன்’ பட டப்பிங்கா?

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘சீமராஜா’ திரைப்படம் வரும் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க ராஜேஷ் எம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த படம் ரஜினிகாந்த், விஜயசாந்தி நடித்த மன்னன்’ படத்தின் ரீமேக் என்றும், விஜயசாந்தி கேரக்டரில் தான் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

e755b59e6d816def0cf9b26f5ecf68a3-1மேலும் இந்த படத்தை 50 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் ராஜேஷ் திட்டமிட்டுள்ளதாகவும், முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பை இரண்டே கட்டங்களில் முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மேலும் ஒரு நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top