Connect with us

சசிகலா சுயநினைவுடன் இருக்கின்றாரா? மருத்துவமனை தகவல்!

Tamil Nadu

சசிகலா சுயநினைவுடன் இருக்கின்றாரா? மருத்துவமனை தகவல்!

b5a5712b30ed61088d9df70d81b0fc0e

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் வெளியான மருத்துவமனையின் தகவலின்படி சசிகலா உடல்நிலை குறித்த அறிவிப்பு வெளி வந்துள்ளது

அந்த அறிவிப்பில் சசிகலா சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் அவரது உடல் சீராக இருப்பதாகவும் சிகிச்சைக்கு தேவையான ஒத்துழைப்பை அவர் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொரோனா வைரசுக்கு வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

1487eb67f5c354eae5835eb8b172ff3f

இந்த நிலையில் சசிகலாவை அவரது உறவினர்கள் நேரில் சென்று மருத்துவமனையில் உடல் நிலை குறித்து தகவலை விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சசிகலாவின் உடல்நிலை குறித்த விபரங்களை அவ்வப்போது அறிக்கைகள் மூலம் தெரிவிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அல்லது நாளை சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top