சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி !! உயர் நீதிமன்றம் அதிரடி..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி. தினகரனும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூர் சிறைக்கு சென்றார். இந்த சூழலில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி என அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை எதிர்த்து தற்போது தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம், பழனிச்சாமி அவர்கள் சின்னமும் தங்களிடம் இருப்பதாகவும் இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்ததாக முறையிட்டனர்.
அதுமட்டுமில்லாமல் சசிகலா அதிமுகவில் இல்லை எனவும் கூறினர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உரிமையியல் நீதிமன்றத்தில் வந்தது. இதனிடையே சசிகலா தொடர்ந்த வழக்கின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் சசிகலா மீண்டும் மேல் முறையீடு செய்வார் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
