நடிகை சமந்தா மயோசியடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தற்போது யசோதா என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இப்பட்டத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.
இதற்கிடையில் எந்த இதற்கிடையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதன் படி, தான் மயோசியடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது காலங்களில் சரியாகி விடும் என கூறியுள்ளார்.
இதனால் தசைகளில் தளர்வு, கீழே விழுந்தால் எழமுடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். சமந்தாவின் இத்தகைய பதிவானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022