இந்த முறை பிக் பாஸ் சீசன் 4 கொரோனா தாக்கம் காரணமாக கொஞ்சம் தாமதமாக தான் துவங்கியது.
இதனால் சென்ற வருடம் முடிய வேண்டிய பிக் பாஸ் சீசன் 4 தற்போது வரை நீடித்து வந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த வாரம் பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ள சென்சேஷன் நடிகை ரம்யா பாண்டியனின் சம்பளம் விவரம் தெரியவந்துள்ளது.
ஆம் பிக் பாஸ் சீசன் 4ல் ஒரு நாள் மட்டும் ரூ. 75,000 சம்பளமாக வாங்கி வருகிறாராம் நடிகை ரம்யா பாண்டியன். இதன் அடிப்படையில் பார்த்தல், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன் என்பதினால் ரூ. 75,00,000 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மேலும் அர்ச்சனா – ரூ. 75,000, ரேகா – 1,00,000, ஷிவானி – 75,000, கேப்ரியலா – 70,000 ஆயிரம் என பலரின் சம்பளம் விவரமும் கசிந்துள்ளது.
இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.