சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. சென்னை வடபழனி போரம் மால் மற்றும் சன் டிவி அலுவலகத்தில் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இருப்பதாகவும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் ரஜினியின் சம்பளத்தையும் சேர்த்து சுமார் 250 கோடி ஆகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு மட்டும் பல கோடிகள் செலவாகும் என்று பட்ஜெட் கணக்கிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது
ரஜினியின் படங்கள் தற்போது 200 முதல் 300 கோடி வரை வசூல் செய்து வரும் நிலையில் 250 கோடி பட்ஜெட்டில் படமெடுக்க ஏஜிஎஸ் முன் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்