Connect with us

ஓடிடி ஹீரோ சூர்யாவிற்கு இவ்வளவு துணிச்சலா ??.. மீண்டும் அந்த இயக்குனருடனா??..

suriyaa 1

பொழுதுபோக்கு

ஓடிடி ஹீரோ சூர்யாவிற்கு இவ்வளவு துணிச்சலா ??.. மீண்டும் அந்த இயக்குனருடனா??..

நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியாகி மக்களின் மனதில் நின்று அதிகம் பேசப்பட்ட படங்கள் சூரரைப் போற்று,ஜெய்பீம். இந்த படம் இரண்டுமே திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் மூலம் தான் வெளிவந்தது.அதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் சிலர் நடிகர் சூர்யாவை ஓடிடி ஹீரோ என அழைத்து வருகின்றனர்.

surarai

இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க,1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்,சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது.

இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் செய்யாத தவறுக்காக காவல்துறையினர் அவர்களை துன்புறுத்தும் மனித உரிமை மீறல்களை இந்த படம் எடுத்துரைக்கிறது .

jai

மேலும் இந்த படம் பாராட்டும் அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கியது. குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் கொடுமைக்காரர்களாக சித்தரித்துள்ளதாக அடுத்தடுத்து பல பிரச்சனைகளை ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் எதிர்கொண்டுள்ளார் நடிகர் சூர்யா. இன்றளவும் இந்த படத்தினால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க இயக்குனர் ஞானவேல், சூர்யாவுக்காக மீண்டும் ஸ்க்ரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளாராம் .இதற்கு சூர்யாவும் ஓகே சொல்ல படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது பாலா இயக்கி வரும் தனது 41வது படமான வாடிவாசல் படப்பிடிப்பில் உள்ளார்.

suriyaa gnavel

இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெறவுள்ளது. இங்கு படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாடிவாசல் ஷூட்டிங்கை முடித்ததும் சூர்யா அடுத்ததாக ஞானவேலுடன் இணைகிறார்.

சிம்புவுடன் இணையும் கவுதம் கார்த்திக்.. படத்துல யாரு ஹீரோ அப்போ !!..

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஜெய்பீம் திரைப்படம் இன்று வரை சர்ச்சையாக இருந்து வரும் நிலையில் மீண்டும் அதே இயக்குனருடன் சூர்யா சேர இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் அமைந்துள்ளது.

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top