Connect with us

டிக் டாக் விலைக்கு வாங்குகிறாரா முகேஷ் அம்பானி? பரபரப்பு தகவல்

News

டிக் டாக் விலைக்கு வாங்குகிறாரா முகேஷ் அம்பானி? பரபரப்பு தகவல்

இந்தியா, சீனா இடையே சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்தியாவில் டிக் டாக் உள்பட நூற்றுக்கும் மேலான சீன செயலிகள் தடை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை செய்யப்படும் என கூறப்படுகிறது

15 தினங்களுக்குள் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்யாவிட்டால் அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயல்பாட்டை தொடங்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி டிக்டாக் அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனமும், பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இரு நிறுவனங்களும் கடந்த மாத இறுதியில் இது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் நடக்கும் என்றும் அதன் பின்னர் டிக் டாக் செயலியை வாங்குவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது

முகேஷ் அம்பானியின் முயற்சியால் இந்தியாவில் டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகள் ஆகியவை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top