Connect with us

அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையா? பாஜகவின் புதிய கொள்கை!

News

அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையா? பாஜகவின் புதிய கொள்கை!

d0b1f378333db89cb7fb0b1b1f284072

பாஜக புதிய கொள்கை ஒன்றை வகுத்து உள்ளதால் அந்த கொள்கையின்படி அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு மோடி போட்டியிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாஜகவில் இனி உயர்பதவிகளில் 75 வயது வரை தான் இருக்க முடியும் என்ற புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன் பெயரில் தான் இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது 

இனிமேல் பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் பதவி கிடையாது என்ற கொள்கை காரணமாக பிரதமர் மோடி அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடிக்கு தற்போது 70 வயது ஆகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவருக்கு 73 வயது இருக்கும் என்பதால் அவர் அடுத்த தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இதன்படி பார்த்தால் பாஜகவில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 70 வயதில் உள்ளதால் என்பதால் பலர் தங்கள் பதவியை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இளம் ரத்தங்கள் பாஜகவை சுறுசுறுப்பாக வேற லெவலுக்கு கொண்டு செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top