Connect with us

6 மாதங்கள் தள்ளி போகிறதா உள்ளாட்சி தேர்தல்?

Tamil Nadu

6 மாதங்கள் தள்ளி போகிறதா உள்ளாட்சி தேர்தல்?

17bf4c5a4fa63007d49424f8440d0164

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் கெடு இன்னும் முடிய இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் திடீரென சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த ஆறு மாத காலம் அவகாசம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு பிறப்பித்த உத்தரவில் சட்டமன்ற தேர்தலை நடத்த முடிந்த தேர்தல் ஆணையத்திற்கு உள்ளாட்சித் தேர்தலை மட்டும் ஏன் நடத்த முடியவில்லை? என்று கேள்வி எழுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top