Connect with us

விளையாட்டுத் துறைக்கு இவ்வளவு முக்கியத்துவமா? ‘செஸ் ஒலிம்பியாட்’-திருப்புமுனையாக இருக்குமா?

chess olympiad

News

விளையாட்டுத் துறைக்கு இவ்வளவு முக்கியத்துவமா? ‘செஸ் ஒலிம்பியாட்’-திருப்புமுனையாக இருக்குமா?

விளையாட்டுத் துறைக்கு இவ்வளவு முக்கியத்துவமா? ‘செஸ் ஒலிம்பியாட்’-திருப்புமுனையாக இருக்குமா?

2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்றைய தினம் தாக்கப்பட்டது. இது மாநில பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

கல்வி, மருத்துவம், வேளாண்மை, கட்டிடக் கலை, தொல்லியல் துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பட்ஜெட்டை ஒதுக்கினார். அதோடு மட்டுமில்லாமல் நாளை மீண்டும் சட்டப்பேரவையில் 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் அவர் விளையாட்டு துறைக்கு பல்வேறு விதமான பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக காணப்படுகிறது. அதன்படி வடசென்னையில் நவீன விளையாட்டு வளாகம் உருவாக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

வடசென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு கழகத்தை உருவாக்க ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்க தேடல் திட்டத்தின்கீழ் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் கூறினார். இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூபாய் 293.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top