பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றமா? – மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி!!

பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்து செய்யப்படும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என பாஜகவை சேர்ந்த அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மனு மீதான விசாரணை அமர்வு இன்று வந்தபோது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள கூடாது என எதிர் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் டிச.7,8 தேதிகளில் ஹை அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை!!!

அதன் படி, பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்ற கருத்தினை முன்வைத்தது. அதோடு மதமாற்றம் தடுப்பு சட்டம் தொடர்பாக மாநிலங்களில் இருந்து விரிவான தகவல் பெற்று பிரமான பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அப்போது மத்திய அரசு சார்பில் உ.பி, ஜம்மு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மதமாற்ற தடுப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுத்தது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000? – வெளியான நியூ அப்டேட்!!

இந்த சூழலில் அனைத்து மாநிலங்களிடம் விளக்கம் பெற்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறிய உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை வருகின்ற திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.