தற்போது உலகமே பயப்பட கூடிய ஒரு வைரஸ் நோயாக அதிகளவு பரவிக்கொண்டு வருகிறது ஒமைக்ரான். இவை இந்தியாவிலும் மிக வேகமாக பரவிக்கொண்டே வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் மற்றுமொரு புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதற்கு IHU என்று பெயரிடப்பட்டுள்ளது. இது B.1.640.2 மாறுபாடு என கல்வியாளர்கள் கண்டுபிடிக்கபட்டது. இதனை மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி உள்ளதாக கூறியுள்ளனர்.
இது தற்போது பரவிவரும் ஒமைக்ரான் விடவும் அதிக எதிர்ப்பை உருவாக்கி வருகிறது என்றும் கூறப்படுகிறது. புதிய மாறுபாட்டின் குறைந்தது 12 பாதிப்புகள் பாதிப்புகள் மார்செய்ல்ஸ் அருகில் பதிவாகியுள்ளது.
இருப்பினும் ஒமைக்ரான் மாறுபாடு இன்னும் பெரும்பாலான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக உள்ளது. இதன் மத்தியில் IHU மாறுபாட்டின் அச்சுறுத்தலும் வேகமாக அதிகரித்து வருகிறது.
ஆயினும் இவை மற்ற நாடுகளில் காணப்படவில்லை. mediRxiv வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகையின் படி, மரபணுக்கள் மூலம் பெறப்பட்டது என்று கூறப்படுகிறது. N501Y மற்றும் E484K உள்பட 14 அமினோ அமிலங்கள் மற்றும் 9 நீக்குதல் ஸ்பைக் புரதத்தில் அமைந்துள்ளன.