சிம்பு சும்மா இருந்தாலும் அவர சுத்தி இருக்குறவங்க சும்மா இருக்க விடமாட்டாங்க போல. ஏற்கனவே மனுஷன் பல பிரச்சனைகளை சந்திச்சு இப்பதான் உருப்படியா மாநாடு என்ற ஒரு மாபெரும் வெற்றி படத்தை வழங்கியிருக்காரு. இதுவரைக்கும் ஒழுங்க படப்பிடிப்புக்கு வராம கெட்ட பெயர் வாங்குன சிம்பு இனி நான் அப்படி இருக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
ஆனால் கூறிய உடனே அவர் வாக்கை காப்பாத்தாத மாதிரி மாநாடு வெற்றி விழாவில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இது பெரும் சர்ச்சையானது. ஒரு படம் ஹிட் கொடுத்துட்டா உடனே ஆணவத்துல ஆடக்கூடாது என பலர் சிம்புவிற்கு அட்வைஸ் பண்ண தொடங்கி விட்டார்கள்.
அதுமட்டுமல்ல மாநாடு படம் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றி பெற்றதோடு, வசூலும் அதிகமாக வந்ததால் சிம்பு அவரின் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி விட்டார். இப்படி அடுக்கடுக்காக அவர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாநாடு வெற்றியை வைத்து அவரின் அடுத்த படத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய தயாரிப்பாளர் திட்டம் போட்டுள்ளாராம்.
அதன்படி தற்போது சிம்பு இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் சிம்பு – கௌதம் – ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய வெற்றி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
மேலும் சமீபத்தில் சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மாநாடு வெற்றியை கணக்கில் கொண்டு வெளிநாட்டு விநியோக உரிமையை பல மடங்கு அதிகமாக்கி 10 கோடி ரூபாய் என்று வியாபாரம் பேசி வருகிறாராம் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இதனால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.