அடுத்த 10 நாட்களுக்கு ரயில் ,பஸ்களில் பயணம் செய்வது அவ்ளோ கஸ்டமா?

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் வரை ரயில் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள், விமானங்களின் கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நிறைவடைய உள்ள நிலையில் ஜூன் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது .

இந்நிலையில் பேருந்து, ரயில்கள் மற்றும் விமானங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்யாதவர்களுக்கு டிக்கெட் கிடைப்பது திண்டாட்டமாக இருப்பதுடன் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்களில் ஜூன் 2-வது வாரம் வரை முன்பதிவு டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து மதுரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.திருச்சி மற்றும் திருவனந்தபுரம் வரை செல்லும் பேருந்துகளில் 2700 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

காவல் துறையில் வேலைவாய்ப்பு : டிஜிபி

தூத்துக்குடி மற்றும் கொச்சிக்கான டிக்கெட் 3000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.இதே போல சென்னையில் இருந்து மதுரை தூத்துக்குடி செல்லக்கூடிய விமானங்களுக்கு முன்பதிவு டிக்கெட் கட்டணம் 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, திருச்சி செல்லக்கூடிய விமானங்களில் 8000 ரூபாய் வரையும் கோவைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரையும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் மும்பை டெல்லி செல்ல கூடிய விமானங்களில் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.