இது சூட்கேஸா? ஸ்கூட்டரா? ஒரே குழப்பமா இருக்கே! ஜப்பானில் புதிய வகை ஸ்கூட்டர் கண்டுபிடிப்பு…..

இந்த டெக்னாலஜி யுகத்தில் நம் அன்றாட வாழ்க்கையில் ஏராளமான இயந்திரங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதில் மிகவும் முக்கியமான இயந்திரம் என்றால் அது வாகனங்கள் தான். ஏனெனில் நாம் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நமது சொந்த உபயோகத்திற்கு வாகனங்கள் பெருமளவில் பயன்படுகின்றன.

முன்பெல்லாம் எங்கு சென்றாலும் கால்நடையாகவே சென்ற காலம் மாறி தற்போது வீட்டு வாசலில் கால் வைத்தாலே வாகனத்தில் தான் வைக்கிறார்கள். அந்த அளவிற்கு வாகனங்கள் நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது. அதேபோல் வாகனங்களும் காலத்திற்கு ஏற்ப அவற்றின் வடிவங்களும் மாறி வருகின்றன.

தற்போது ஜப்பானில் ஒரு புதிய வகை குட்டி ஸ்கூட்டரை கண்டுபிடித்து உள்ளார்கள். பொய்மோ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரை டோக்கியோ பல்கலைக்கழக போராசிரியர் ஹிரோக்கி சட்டோ என்பவர் வடிவமைத்துள்ளார். ஏர் பலூன் போல் இருக்கும் இந்த ஸ்கூட்டரில் காற்றை நிரப்பி ஓட்டி செல்லலாமாம்.

பார்ப்பதற்கு சூட்கேஸ் போல தோற்றமளிக்கும் இந்த ஸ்கூட்டரை நாம் எளிதாக எங்கு வேண்டுமானாலும் தூக்கி செல்லலாம். நமக்கு தேவைப்படும் போது பலூனில் காற்றை நிரப்புவது போல இதில் காற்றை நிரப்பி பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது மணிக்கு சுமார் 15 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூட்கேஸ் சைசில் ஒரு ஸ்கூட்டரை வடிவமைத்து நாம் எங்கு சென்றாலும் அதை எளிதாக கைகளில் கொண்டு செல்லும் அளவிற்கு நம் டெக்னாலஜி வளர்ந்து விட்டது. இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகளை பார்க்கும் போது ஒரு புறம் ஆச்சரியமும் மற்றொரு புறம் பிரம்மிப்பும் ஏற்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment