இது சோதனையா? பழிவாங்கும் முயற்சியா? இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல ரெய்டா? ஆத்திரத்தில் ஈபிஎஸ்!

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே நம் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது அதிமுக. இந்த ஆட்சியின் ஆரம்பம் முதலே எதிர்க்கட்சியான அதிமுக முக்கிய நிர்வாகிகள் வீட்டில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.லஞ்ச ஒழிப்புத்துறை

இதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் அதிமுக தொண்டர்களை அச்சுறுத்த நினைக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இன்றைய தினம் காலையில் கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடுகளில் சோதனை என்ற பெயரில் நடத்தப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

இவ்வாறு செய்யும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த சில நாட்களாகவே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெறுவது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment