இது நம்ம லிஸ்ட்ல இல்லையே! ‘ஏகே 62’படத்தின் வில்லன் இவரா?

தமிழ் சினிமாவில் நானும் ரெளடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கிய பம்பர் ஹிட் கொடுத்தவர் ​​இயக்குனர் விக்னேஷ் சிவன். இவரது நடிகர் அஜித்துடன் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.

அதற்கு ஏற்ப துணிவு படத்திம் வருகின்ற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜன.19-ம் தேதி விக்கி இயக்கத்தில் ஏகே 62 படப்பிடிப்பு பூஜையுடம் துவங்க இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் வந்த வண்ணமாகவே உள்ளன.

அதன் படி, அஜித்திற்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தெரிகிறது ஏற்கனவே திரிஷா, நயன்தாரா வேறு படங்களில் கமிட்டாகி உள்ளதால் காஜலுடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

அதே போல் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த சாமி ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது கூட்டணி உறுதியானால் 29 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் – அரவிந்த் சாமி கூட்டணி இதுவே ஆகும்.

மேலும், ஏகே 62 படத்தை விக்கி இயக்குவதால் வழக்கம் போல் காமெடி, காதல், ஆக்‌ஷன் போன்றவைகளுக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.