News
இவர் மனிதரா? இல்லை ரோபோவா? தோசை சுடும் மனிதரின் வீடியோ வைரல்!
சாலையோர கடையில் தோசை சுடும் நபர் ஒருவர் தோசை சுடும் வேகத்தைப் பார்த்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் இவர் மனிதரா? இல்லை ரோபோவா? என்ற ரீதியில் டுவிட் ஒன்றை பதிவு செய்து வீடியோவும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது சுவராசியமான டுவிட்டுக்களை பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் சமீபத்தில் 29 வினாடிகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரே நேரத்தில் நான்கு தோசைகளை ஊற்றி அதில் சில மசாலாக்களை சேர்த்து தோசை சுடும் நபர் ஒருவர், அதன் பின்னர் அந்த தோசையை எடுத்து தட்டில் வைத்து சற்று தூரமாக இருக்கும் ஒருவருக்கு தள்ளிவிடுகிறார். அந்த நபர் மிக லாவகமாக தோசை தட்டை பிடித்து வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்.
இதே போல அவர் ஒரு ரோபோ ரோபோ போல், மின்னல் வேகத்தில் தோசையை எடுத்து தட்டில் வைத்து தூக்கி எறியும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. நம்பவே முடியாத அளவில் உள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவில் ’இந்த ஜென்டில்மேன் ரோபோக்கள் கூட செய்ய முடியாத வேலையை செய்து முடிப்பதை பார்த்து நான் அசந்துவிட்டேன். நான் அவரை பார்த்து சோர்வாக இருப்பதாக உணர்கிறேன். அவர் சுடும் தோசையை பார்த்தால் எனக்கு பசியே எடுத்து விட்டது என்று கூறியுள்ளார். இந்த விடியோவை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னல் வேகத்தில் தோசை சுடும் இந்த கடை மும்பையிலுள்ள தாதர் என்ற பகுதியில் இருப்பதாக நெட்டிசன் ஒருவர் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
This gentleman makes robots look like unproductive slowpokes… I’m tired just watching him…and hungry, of course.. pic.twitter.com/VmdzZDMiOk
— anand mahindra (@anandmahindra) August 17, 2021
