கேட்டுக்கோங்க மக்களே; இன்னும் மூணு மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் அடித்து பெய்யப் போகுது மழை!!
தற்போது தொடர்ச்சியாக நம் தமிழகத்தில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுவும் குறிப்பாக இன்று தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் குறிப்பிட்ட 15 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அந்த 15 மாவட்டங்கள்:
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மேற்சொல்லப்பட்ட 15 மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
