Connect with us

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா இயக்குனர் செல்வராகவன்?

Entertainment

இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா இயக்குனர் செல்வராகவன்?

a8a596ed22f503d013dbcd3a77ee4401

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது முன்னாள் மனைவியும் நடிகையுமான சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவர் தனது இரண்டாவது மனைவியான கீதாஞ்சலியையும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் உலா வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வால் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில் அடுத்ததாக அவர் தன்னுடைய உதவி இயக்குனராக இருந்த கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்னொருவர் இருந்தால் தான் நிம்மதி என்று ஒருபோதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதை போல் ஒரு உன் இம்சை எதுவுமில்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் செல்வராகவன் தனது இரண்டாவது மனைவியான கீஞ்சலியையும் விவாகரத்து செய்யப்போகிறார் என்ற வதந்தி காட்டுத் தீயாய் பரவி வருகிறது ஆனால் இதுகுறித்து செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். இது ஒரு கேவலமான வதந்தி. அவர் ஒரு எதார்த்தமாக டுவிட்டை பதிவு செய்தார். எல்லாருக்குமே ஒரு பொது ஸ்பேஸ் தேவை என்பதுதான் அவர் பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு கை கால் முளைத்து கதை கட்டிவிடுவது மோசமான ஒன்று. நாங்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் 

இதனை அடுத்து செல்வராகவன் தனது மனைவியை விவாகரத்து செய்ய போகிறார் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top