Connect with us

டிமான்டி காலனி இரண்டாம் பாகமா ?.. உறுதி செய்த படக்குழு..

demandi

கல்வி

டிமான்டி காலனி இரண்டாம் பாகமா ?.. உறுதி செய்த படக்குழு..

டிமான்ட்டி காலனி திரைப்படம் 2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியானது.அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

demadi

அதை தொடர்ந்து அஜய் ஞானமுத்துவிற்கு நயன்தாராவை வைத்து ’இமைக்கா நொடிகள்’ என்ற வெற்றி படத்தை இயக்க வாய்ப்பு தொடர்ந்து வந்தது. பிறகு விக்ரமின் கோப்ரா என முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. அந்த அளவிற்கு இப்படம் அனைவரையும் கவர்ந்தது.

arulnithi demonte colony tamil movie stills 639d5e5

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்படம் வந்து கிட்டததட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தில் அருள்நிதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதன் அறிவிப்பை “டிமான்டி காலனி” திரைப்படம் வெளியான (மே 22, 2015) 7 ஆண்டுகள் கழித்து அதே நாளில் நேற்று இதன் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″ படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெண்களை தப்பாக காட்டிய ரஜினி படங்களா!!.. சர்ச்சையில் சிக்கிய R J பாலாஜி!!..

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in கல்வி

To Top