தீபத் திருவிழா! டிச.6-ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை?

திருவண்ணாமலையில் வருகின்ற டிச.6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற டிச.6-ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: பாஜக நிர்வாகி பதில் மனு தாக்கல்!!

இதன் காரணமாக அம்மாவட்டத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மகா தீபத்தின் போது 13 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து 60 இடங்களில் கார்பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி!! பச்சிளம் குழந்தையின் உடலை கடித்து குதறிய தெருநாய்கள்!!

இந்நிலையில் டிச.6-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் நலன் கருதி இத்தகைய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.