Tamil Nadu
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கொரோனா தொற்றா? பரிசோதனை முடிவு!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறை தண்டனை முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது
இந்த செய்தியை அவரது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் என்பவர் உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் மற்றும் அமமுக கட்சியினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர்
இந்த நிலையில் இன்று மாலை திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்த பின்னர் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் முதற்கட்ட பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன
எனவே இதன்மூலம் சசிகலாவுக்கு கொரோனா தொற்று என சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகலா உடல்நிலை இன்னும் ஓரிரு நாள்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்றும் அவரது விடுதலையில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
