
தமிழகம்
ஆட்டோ கட்டணம் மீண்டும் உயர்கிறதா ?- அதிர்ச்சியில் பொதுமக்கள்..
ஆட்டோ கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த தமிழக அரசு நியமித்த குழு பரிந்துரை செய்துள்ளது.
ஆட்டோ கட்டணங்களை மறு நிர்ணயம் செய்வதற்காக கட்டணங்களை மாற்றி அமைத்து அரசுக்கு குழு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோ கட்டணமாக குறைந்த பட்சமாக ரூ.12 முதல் ரூ.25 ஆக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
இந்த கருத்துக்களை கேட்ட போக்குவரத்து துறை ஆட்டோ கட்டணம் உயர்த்துவது தொடர்பாக முதல் 1.5 கி.லோ மீட்டருக்கு ரூ.40 ரூபாயும் கூடுதலாக 1 கி.லோ மீட்டருக்கு 18 ரூபாயும் உயர்த்தலாம் என இந்த குழு அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
இருப்பினும் கட்டணம் குறித்து இறுதி முடிவுகள் அரசு தரப்பில் எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே இருந்த ரூ.25 கட்டுப்படி ஆகாத காரணத்தினால் தற்போது 40 ரூபாயாக உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த பரிந்துரைக்கு ஆட்டோ தொழிற்சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து மக்களுக்கும் ஆட்டோ பயணம் முக்கியமானதாக அமைந்திருக்கும் நிலையில் தற்போது கட்டணம் மீண்டும் உயரும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
