பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது காட்சி இறுதி கட்டத்திற்கு வந்து உள்ள நிலையில் இன்றும் நாளையும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கேபி ரூபாய் 5 லட்சம் பெற்று விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டதால் தற்போது ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் மட்டுமே இறுதிப் போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி ஆரி சுமார் 18 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருப்பதாகவும் அவருக்கு அடுத்ததாக பாலாஜி மற்றும் ரியோ ஆகிய
இருவரும் கிட்டத்தட்ட சமமான வாக்குகளை பெற்று மிகக் குறுகிய இடைவெளியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
எனவே ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர் பாலாஜியா? அல்லது ரியோவா? என்பது தான் இப்போதைய கேள்வியாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தீயாய் ஒரு தகவல் பரவி வருகிறது
இருப்பினும் டைட்டில் வின்னர் யார் என்பதை நாளைதான் கமல்ஹாசன் அறிவிப்பார் என்றும் இன்று மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது