அல்லு அர்ஜூன் கோபப்பட்டாரா? மேடையில் நடந்தது என்ன? விளக்கம் அளித்த விஜே அஞ்சனா…!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு பான் இந்தியா படம் என்பதால் படத்திற்கான புரோமோஷன் பணிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அந்த வகையில் சென்னையிலும் புஷ்பா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது.

அல்லு அர்ஜுன்

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன், உள்ளிட்ட அனைத்து படக்குழுவினரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தொகுத்து வழங்கினார். இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதியில் அல்லு அர்ஜுனிடம் புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு 2 ஸ்டெப் டான்ஸ் ஆடுமாறு அஞ்சனா கேட்டார். ஆனால் அல்லு அர்ஜூன் அஞ்சனாவின் கையை தட்டி விட்டு விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

விஜே அஞ்சனா

இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பகிரப்பட்டு வந்தது. மேலும் அஞ்சனா எழுப்பிய கேள்வியால் தான் கோபமடைந்து அல்லு அர்ஜுன் மேடையில் இருந்து கீழே இறங்கியதாக செய்திகள் வெளியாக தொடங்கியது. இது பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது அஞ்சனா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அஞ்சனா கூறியிருப்பதாவது, “அந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டிருந்த நேரம் முடிந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு நேரமின்மை காரணமாக, நான் இரண்டு ஸ்டெப் டான்ஸ் ஆட சொல்லிய போதும், அதனை நாகரிகமாக மறுத்துவிட்டு கீழே இறங்கினார் அல்லு அர்ஜுன். இது தான் நடந்தது.

தயவு செய்து இதை பெரிதாக்க வேண்டாம். அதே நேரத்தில் அல்லு அர்ஜூன் நான் கேட்ட கேள்வியால் தான் கோபமாக மேடையில் இருந்து இறங்கினார் என்பது தவறான தகவல்” என விளக்கம் அளித்துள்ளார். ஒரு நிகழ்வின் உண்மை சம்பவம் தெரியாமல் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவது மோசமான செயல்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment