Connect with us

ஆப்கானிஸ்தான் பெயர் மாற்றமா?

News

ஆப்கானிஸ்தான் பெயர் மாற்றமா?

3936b2460f7376c505cdb1dff39c2d22

ஆப்கானிஸ்தானில் கடந்த சில வருடங்களாக தாலிபான் அமைப்புக்கும் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த போரில் தாலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனர். தலைநகர் காபூல் உள்பட பல பகுதிகள் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் ஆப்கன் அதிபர் அஸ்ரப் கானி என்பவர் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகி உள்ளார்.

இந்த நிலையில் தாலிபான்களின் தலைமையில் புதிய அரசு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்’ என்ற பெயரை தாலிபான்கள் மாற்றி உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தாலிபான்கள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறை வெடித்து வருவதால் பொதுமக்கள் பலர் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர் என்பதும், இந்தியா உள்பட பல்வேறு நாட்டு தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top