நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
நடிகை மீராமிதுன், தனது சமூக வலைத்தளத்தில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மன உளைச்சல் தாங்காமல் இந்த தற்கொலை முடிவை எடுத்துக் கொள்ளப் போவதாகவும் இது தற்கொலை இல்லை என்றும் கொலை என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்
கோலிவுட்டில் உள்ள அனைவரும் தனக்கு எதிராக சதி செய்வதாகவும், ஒரு ஆண் தன்னை கடந்த 3 ஆண்டுகளாக பின் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதாகவும் இதனால்தான் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
மேலும் முதல்வர் மற்றும் பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தான் பணிபுரியும் அஜித்ரவி என்ற நிறுவனம் தன்னை வளர விடாமல் தடுப்பதாகவும் தான் தற்கொலை செய்து கொள்ள இதுவும் ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது