நடிகர் வடிவேலுக்கு ஒமைக்ரான் தொற்றா? அமைச்சர் கூறும் அதிர்ச்சி தகவல்!

கடந்த சில நாட்களாகவே திரை சினிமாவின் பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டன. குறிப்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உலக நாயகன் கமலஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் விக்ரமுக்கும் கொரோனா பாதிப்புஉறுதி செய்யப்பட்டது.

கொரோனா

இந்த நிலையில் கடந்த வாரம் வைகைப்புயல் வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டனில் படப்பிடிப்பு சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவருக்கு ஒமிகிரான் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாய் சேகர் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிக்காக லண்டன் சென்று திரும்பி வந்த நடிகர் வடிவேலுக்கு ஒமைக்ரான் தொற்று இருக்குமோய என்ற சந்தேகமும் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். இருப்பினும் ஒமிகிரான் உள்ளதா என்பது பரிசோதனையின் முடிவில் தான் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment