காங்கிரஸுக்கு கடும் போட்டியாக உருவெடுத்த ஆம் ஆத்மி… வாக்கு சதவீதம் என்ன தெரியுமா?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை வைத்து பார்க்கும் போது ஆம் ஆத்மி காங்கிரஸுக்கு அடுத்த படியாக 3வது பெரிய கட்சியாக உருவெடுத்து வருவது தெரியவந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பாஜக அதிக பட்சமாக 41.29 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 2.33 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 0.38 சதவீத வாக்குகளையு பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ்வாதி 12.88 சதவீத வாக்குகளயும் பெற்றுள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 42.01 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 22.98 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ்வாதி 1.77 சதவீத வாக்குகளையும், பிறகட்சிகள் 0.14 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. நோட்டாவிற்கு 0.71 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

கோவாவில் அதிக பட்சமாக பாஜக 33.31 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 23.46 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 6.7 சதவீத வாக்குகளையும், கோவா பார்வர்டு கட்சி 1.84 சதவீத வாக்குகளையும், புரட்சிகர கோன்ஸ் கட்சி 7.60 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உட்பட 25.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டாவிற்கு 1.12 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக 37.83 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 16.83 சதவீத வாக்குகளையும், ஐக்கிய ஜனதா தளம் 10.77 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நோட்டாவிற்கு 0.56 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 44.33 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 37.91 சதவீத வாக்குகளும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு 4.82 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 3.31 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. நோட்டாவிற்கு 0.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment