
தமிழகம்
என்னது!! அமேசானில் ஒரு வாளியின் விலை ரூ.25,999 ரூபாயா?
அமேசானில் ஒரு பிளாஸ்டி பக்கெட்டின் விலை 25,000 ரூபாய் என நிர்ணயம் செய்திருப்பதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆடம்பர பொருட்களை அதிக விலைக்கு விற்கப்படுவது புதிதல்ல .ஆனால் வீடுகளில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு பிளாஸ்டிக் வாளியின் விலை தள்ளுபடி போக 25,999 ரூபாய் என அமேசானின் பட்டியலிடப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது குறித்து விவேக் ராஜூ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த பக்கெட் விற்று தீர்ந்து விட்டதாக அமேசானில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமேசானில் ஒரு பிளாஸ்டிக்கின் விலை 25,000 ரூபாய் என நிர்ணயம் செய்திருப்பது அனைவராலும் பேசும் பொருளாக மாறிவிட்டது.
28% discount!! You should order a few!
— Fareed Ahmad (@ahmadfareed007) May 23, 2022
