கடும் எதிர்ப்பு எதிரொலி.. 12 மணி நேர வேலை மசோதா இன்றே வாபஸ்?

தமிழக சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை குறித்த மசோதா சமீபத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த மசோதா விரைவில் கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திடீரென இந்த மசோதாவை சட்டத்துறைக்கு அனுப்பி ஆலோசனை கேட்க இருப்பதாகவும் சட்டத்துறையின் ஆலோசனைக்குப் பின்னர் இந்த மசோதாவை திரும்ப பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் திமுக அரசு சட்டமன்றத்தில் 12 மணி நேர வேலை குறித்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் எதிர்க்கட்சிகள் ஆன அதிமுக மற்றும் பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தது என்பதும் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த மசோதா சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சட்ட துறையின் ஆலோசனை கேட்டு அதன்பின் இந்த மசோதாவை இன்றே திரும்ப பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடும் எதிர்ப்பு எதிரொலி காரணமாக 12 மணி நேர வேலை என்ற மசோதாவை தமிழக அரசு திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.