இரு தாய்க்கு ஒரு மகன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் -25

பாடல்

“ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.”

பொருள்:

தேவகிக்கு மகனாய் அவதரித்து பின் அதே இரவில் யசோதையின் மகனாய் மாறி கம்சனின் கண்ணில் படாமல் வளர்ந்து வந்தவனே! தனக்கு தெரியாமல் வளர்ந்து வருவதை அறிந்ததும், பின் நடக்க போவதை அறியாமல் உனக்கு தீங்கு நினைத்த கம்சனின் நினைப்பை தவறாக்கி அவன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமாலே! உன்னை பிரார்த்தித்து வந்த எங்களின் குறிக்கோளை நிறைவேற்றினால் உன் பிராட்டியான லட்சுமி ஆசைப்படும் செல்வத்தையும், அதை காக்கவல்ல உன் வீரியத்தையும் நாங்கள் பாடி எங்கள் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்.

விளக்கம்:

தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது பிள்ளையால் மரணம் நேரும்ன்னு சாபம் வாங்கிய கம்சன், தங்கைக்கு பிறக்கும் 7குழந்தைகள் அனைத்தையும் கொன்றான். அவனிடமிருந்து தப்பி, யசோதை- நந்தகோபன் தம்பதியரிடம் வளர்ந்து வந்த கண்ணன், மரணம் நேராதுன்னு நினைச்ச அவன் நினைப்பை பொய்யாக்கியவனை தொழுதால், அவன்மீது ஆசை வைத்திருக்கும் லட்சுமி பிராட்டி மனம் மகிழ்ந்து செல்வத்தை அள்ளித்தருவதாய் அமைந்த பாடல். கடைக்கு போக சொன்னா குழந்தைகள் சாக்குபோக்கு சொல்லும். ஆனா, பொருட்களை வாங்கிக்கிட்டு உனக்கு சாக்லேட், பர்பி வாங்கிக்கோன்னு சொன்னா ஓடும். அதுமாதிரி நம்ம ஆசையை தூண்டிவிட்டு, கடவுளை தொழச்செய்கிறது இப்பாடல்.

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.