சிங்கப் பெண்ணாக மாறிய சிங்கிள் பெண்… இந்தியாவை மிரள வைத்த வீடியோ!

கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம் குண்டபுராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதை எதிர்த்து இந்து, மாணவ மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் காவித்துண்டு போன்ற ஆடைகளை அணிந்துவந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் கல்லூரி நிர்வாகம் முஸ்லிம் மாணவிகள், கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்றும், மீறி வந்தால் தனி அறையில் அமரவைக்கப்படுவார்கள் என்றும் கூறியது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

இதனையடுத்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் இடையே காவி துண்டு, ஹிஜாப் என பிரிவாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள பள்ளி ஒன்றில் தேசியக்கொடியேற்றும் கம்பத்தில் இந்து மாணவர்கள் காவிக்கொடியை ஏற்றியது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. தேசிய கொடியை அவமதித்த மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தேவை என கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்கான் என்ற மாணவியைக் கண்டதும், அங்கிருந்த காவி துண்டு அணிந்த மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். இதற்கு தனி ஒரு ஆளாக பதிலடி கொடுக்கும் விதமாக அந்த மாணவி ‘அல்லாஹூ அக்பர்’ என முழக்கமிட்டுள்ளார்.

பேட்டி ஒன்றிற்கு பதிலளித்துள்ள “நான் கவலைப்படவில்லை.எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே வந்தேன்.புர்கா அணிந்ததால்என்னை அனுமதிக்கவில்லை.என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்தே நான் அல்லாஹு அக்பர் கூறஆரம்பித்தேன்.எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர்” என தைரியமாக பதிலளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment