ரேஷன் கடைகளில் கருவிழி முறை: அமைச்சர் தொடங்கி வைத்தார்.!!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவுகள் குறித்து குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் முதியவர்கள் அரிசி மற்றும் சர்க்கரை வாங்குவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகைக்குப் பதிலாக கருவிழிப் பதிவு விரைவில் தொடங்க இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். இதனால் கைரேகை பிரச்சனை இனிமேல் வராது என தெரிவித்தார்.

இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில்; பாஜக மகளிர் அணி நிர்வாகி கைது!

இந்த சூழலில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யும் நடைமுறை முதற்கட்டமாக திருவல்லிக்கேணியில் அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்துள்ளார்.

பின்னர் பேசிய அவர் இத்தகைய நடைமுறையானது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் செயல்பாட்டில் இருப்பதாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோட்டமாக தமிழகம் இருப்பதாக தெரிவித்தார்.

கள்ளக்காதல் விவகாரம்: கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி, மகள்..!!!

மேலும், இத்தகைய திட்டமானது மற்ற மாவட்டங்களில் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment