News
பிளிப்கார்ட், ஓலா பாணியில் ஐஆர்சிடிசி: பயணிகளுக்கு புதிய வசதி

பிளிப்கார்ட், ஓலா போன்ற தனியார் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ’பே லேட்டர்’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது என்பது தெரிந்ததே. அதாவது பொருள்களை தற்போது வாங்கிவிட்டு அல்லது ஓலாவில் பயணம் செய்துவிட்டு ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து பணத்தை செலுத்தி கொள்ளலாம் என்பதுதான் ’பே லேட்டர்’ என்ற திட்டம்
இந்த திட்டத்தின்படி பிளிப்கார்டில் பொருட்களை வாங்கிவிட்டு அல்லது ஓலாவில் பயணம் செய்துவிட்டு ஒரு மாதம் கழித்து பணம் செலுத்தினால் போதும். இந்த புதிய வசதியை தற்போது இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பயணிகள் தங்களுக்குத் தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு 14 நாட்கள் கழித்து பணம் செலுத்திக் கொள்ளலாம். அதன் பின்னர் செலுத்தினால் 3.5% வட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வசதி ரயில்வே பயணிகள் பெரும் உபயோகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
