ஐ.ஆர்.சி.டிசி இணையதளத்தில் பேருந்து முன்பதிவு வசதி!

ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த இணையதளம் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் பேருந்துகள் முன்பதிவு செய்யும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்ய இந்த செயலியில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் இந்த வசதி 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஐ.ஆர்.சி.டிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது

மேலும் ஐஆர்சிடிசி மூலம் பேருந்துகள் முன்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு ஆதார் அட்டையின் மூலம் வருடத்திற்கு 12 மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment