
பொழுதுபோக்கு
அடி தூள்!!! வசூலில் மாஸ் காட்டும் இரவின் நிழல்; முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
ஒத்த செருப்பு படத்தில் நடித்திருந்த பார்த்திபனின் படமானது தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது. இந்நிலையில் அந்த படத்தைப்போன்றே நடிகர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சியில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
குறிப்பாக ஒரே ஷாட்டில் படமாக்கி Non Linear முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம். இந்த படத்திற்கு இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதனிடையே இப்படம் கேன்ஸ் திரைப்பல விழாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்போது இரவின் நிழல் படமானது நிராகரிக்கப்பட்டதால் மக்களிடையே வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்த்து இருந்து வந்தது.
அதே சமயம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையை பெற்றுத்தந்துள்ளது. இந்த சூழலில் நேற்றை வெளியான இப்படமானது அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். நாளையும் விடுமுறை நாள் என்பதனால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
