
பொழுதுபோக்கு
இரவின் நிழல் இசைவெளியீட்டு விழா டிவியிலயா? promoவை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி!
தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவருபவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தான். அவரின் ஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து இரவின் நிழல் படத்தை நடித்து இயக்கியுள்ளார்.
உலகிலேயே முதன்முறையாக நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இவரது இரவின் நிழல் உருவாகியிருக்கிறது. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைப்படம்’ என்ற பெருமையுடன் இந்த படம் ஜூலை 15இல் வெளியாக இருக்கிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ளது.
இந்நிலையில், படத்தில் புரொமோஷனுக்காக இதில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.
அதைத்தொடர்ந்து இந்தப் படத்திலிருந்து பாபம் செய்யாதிரு என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஜூன் 5ஆம் தேதி படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பார்த்திபன், ஏ.ஆர். ரஹ்மான், அபிஷேக் பச்சன், சரத்குமார், ராதிகா மற்றும் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தனது சேனலில் ஒளிபரப்ப உள்ளது. முன்னணி சின்னத்திரையான விஜய் டிவியில் இந்த இசைவெளியீட்டு விழாவை வரும் ஞாயிறு கிழமை ஒளிபரப்பப்படுகிறது.
த்ரிஷாவின் location கேட்டு அடம்பிடிக்கும் கார்த்தி! புதுசா இருக்கே இந்த அப்டேட்..
அதைக்கான புரோமோவை விஜய் டிவி விளம்பர் படுத்தி வருகிறது…
