இறைவனின் திருவடியின் பெருமைகள் -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -20


85c1ed4c249e03dfbc15ffad5ce0131b

பாடல் 

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால்நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேல்ஓர் எம்பாவாய்.

பொருள் 

எப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக..

விளக்கம் 

அழகான முகம், பராக்கிரத்தினை எடுத்து சொல்லும்  தோள்கள்ன்னு  இறைவனை ரசிக்க ஆயிரம் இருந்தாலும், அபயம் தரும் திருக்கரங்களும்,  திக்கற்றவர்கள்  சரணாகதி அடையும் திருவடியுமே முக்கியம்.  அந்த திருவடியின் அருமைபெருமைகளை  எடுத்து சொல்வதாய்  அமைந்த பாடல் இது.

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும் …

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.