இறைவனின் சிறப்புகள் – திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 14


2a7af031d9591a604964a6440fb0cd85

பாடல்…

காதார் குழையாட பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடுஏலோர் எம்பாவாய்.

பொருள்

காதில் அணிந்த தோடுகள் ஆடவும், உடம்பில் அணிந்துள்ள நகைகள் அசைந்தாடவும், கூந்தலில் சூடிய மாலைகள் ஆடவும், ஆடுகின்ற மாலைகளில் மொய்த்திடும் வண்டுகள் ஆடவும், குளிர்ந்த பொய்கையில் மூழ்கி எழுவோம். பின்னர் தில்லையில் எழுந்தருளி இருக்கும் இறைவனை பாடி மகிழ்வோம். அவன் மறைப்பொருளை பாடுவோம். அவன் அணிந்த கொன்றை மலரைப் பாடி, முதலும் முடிவுமாக இருக்கும் நிலையைப் பாடி, நம்மைப் பாதுகாத்து ஆட்கொண்ட சக்தியின், மேன்மை பொருந்திய திருவடித் திறத்தைப் பாடி நீராடுவோம்.

விளக்கம்..

இறைவனின் சக்தியை நம்மை காக்கும் திறனை எடுத்துச்சொல்வதாய் இருக்கு இப்பாடல்..

திருவெம்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்….

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews