இறை தரிசனம் வேண்டி-திருப்பாவை பாடலும்,விளக்கமும் -16


1d5b220daad07455bd8c419e5919c607

பாடல்

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!  கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே!  மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு  அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!  நீ
நேய நிலைக் கதவம் நீக்கு — ஏலோர் எம்பாவாய்.

பொருள்..

எங்களுக்கு தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே ! கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே ! அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு !
ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான்
நேற்றே விரும்பியதைக் தருகிறேனென்று வாக்களித்துள்ளான்
எனவே, அவனை துயிலெழுப்ப (பாட) தூய்மையுடன் வந்துள்ளோம்
முதல் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள
கதவை திறந்து எங்களை உள்ளேவிடு..

விளக்கம்..

ஒருவாறாக தூங்கிக்கொண்டிருந்த கோபியரையெழுப்பிய துயிலெழுப்பி, நீராடி, பூச்சூடி பாவையர்கள் நந்தகோபன் மாளிகையை அணுகி, அவனை தரிசிக்கும்விதமாக வாயில்காப்போனை கதவைத்திறக்க சொல்லுவதாக அமைந்தது இப்பாடல்..

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.