IPL: RCB vs RR….நாலாவது சதம் அடிப்பாரா பட்லர்? ஹாட்ரிக் டக் அவுட் ஆவாரா கோலி?

நம் இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அனைத்து அணிகளும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை தழுவிக்கொண்டு புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை ஆக்கிரமித்து வருகின்றன. நேற்றைய ஆட்டத்தில் கூட நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியுடன் மோதி படுதோல்வி அடைந்தது.

இறுதிவரை போராடியும் பஞ்சாப் அணி தான் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய போட்டி புனேவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பெங்களூர் அணி எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது.  இந்தப் போட்டியானது மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது.

கடந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் சுருண்ட பெங்களூர் அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரும் சவாலாக உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என அனைவரும் ஜொலித்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...