புதிய ஐ.பி.எல். அணிகளுக்கு இன்று ஏலம்! ஏலம் எடுப்பது யார் யார்?

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு அணிகளை இணைக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் புதிதாக 2 அணிகளை ஏலம் இன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நடைபெறும் பதினைந்தாவது ஐபிஎல் போட்டிகளுக்கு கூடுதலாக பங்கேற்க உள்ள இரு அணிகளுக்கும் இன்று ஏலம் நடைபெறுவதாகவும் இந்த அணிகளை வாங்குவதற்கு அதானி குழுமம், ஜிண்டால் ஸ்டீல், தீபிகா படுகோனே நிறுவனம் உள்ளிட்ட 22 நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அணிகளை வாங்குவதற்கு அடிப்படை ஏலம் ரூ.2000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் அணியை ஏலம் எடுப்பது யார் என்பது குறித்த ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு நகரங்களில் அடிப்படையாகக் கொண்டு புதிய அணிகள் உருவாகும் என்றும் இந்த ஏலம் முடிந்ததும் ஒட்டுமொத்தமாக அத்தனை அணிகளுக்கும் வீரர்களை ஏலம் விடும் பணி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்களிடம் உள்ள மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தோனி, ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகிய மூவரையும் தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.