IPL 2022: play off-வுக்கு நானா? நீயா? என போட்டி போட்டுக் கொள்ளும் ஹைதராபாத்-கொல்கத்தா…!!

தற்போது இந்தியாவில் பரபரப்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக 5 முறை சாம்பியனும் மும்பையும் நான்கு முறை சாம்பியனான சென்னையும் இந்த சீசனில் அந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை என்று கூறலாம்.

இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் கடந்த சில நாட்களாகவே உள்ளன. மேலும் நேற்றைய ஆட்டத்தில் கூட பெங்களூர் அணி பஞ்சாப் அணிக்கு எதிராக பலப்பரீட்சை மேற்கொண்டது.

இதில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 209 ரன்களை எடுத்தது. இதனால் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுக்களை இழந்து படுதோல்வி அடைந்தது.

இதனால் பெங்களூர்  மெல்ல மெல்ல தகுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து கொண்டு வருவதாக காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே பெரும் சவாலான போட்டி நடைபெறுகிறது.

ஏனென்றால் இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் வருகின்ற ஆட்டங்களில் இரண்டு அணிகளும் கட்டாயம் வெற்றி பெற்றால் தகுதி சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.