மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள்: தேதி அறிவிப்பு!

513cd0ba20f9c1778b6d27cf8ca75588-2

2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் 29 போட்டிகள் முடிவுற்ற நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி தற்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது இதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

முதல் குவாலிஃபையர் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் எலிமினேட்டர் போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெறும் என்றும் குவாலிஃபையர் 2 அக்டோபர் 13ஆம் தேதியும் இறுதிப்போட்டி அக்டோபர் 15ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
மேலும் செப்டம்பர் 19ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

b43c3b736657638daa51349a19c7930c-1

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment