
Sports
டெல்லி அணியை துவம்சம் செய்த சென்னை அணி!!…
ஐபிஎல் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கியது. டெல்லிக்கு அணி டாஸை வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஜடேஜா நீக்கப்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே, ருத்துராஜ் ஜோடி வழக்கம் போல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி , டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் யாரையுமே விட்டு வைக்க வில்லை.குறிப்பாக டிவோன் கான்வே அடித்த ஷாட், சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை எதிர்கொண்ட விதம் அப்படியே, நம்ம மைக்கேல் ஹஸியை பார்த்தது போல் இருந்தது. கான்வே 29 பந்துகள் அடித்திருக்கும் போதே அரைசதம் அடித்தார். அப்போதே 4 சிக்சர்களை கான்வே விளாசினார். குல்தீப் யாதவின் 8 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 30 ரன்களை விளாசினார். இதே போன்று வேகப்பந்துவீச்சாளர் நோக்கியா ஓவரில் இறங்கி வந்து சிக்சர் அடித்தார்.கான்வே அதிரடியை காட்டியதால் நம்ம ருத்துராஜ் கொஞ்சம் அமைதி காத்தார். ருத்துராஜ் 41 ரன்களில் ஆட்டமிழக்க , முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 110 ரன்களை சேர்த்தது. நடப்பு சீசனில் 2வது முறையாக இந்த ஜோடி 100 ரன்களை சேர்த்துள்ளது.
கான்வே 49 பந்துகளில் 87 ரன்கள் அடித்த நிலையில் கலில் அகமது பந்துவீச்சில் ரிஷப் பண்டிடம் அவுட்டானார். சிவம் துபேவும் 19 பந்துகளில் 32 ரன்களை குவித்தார். கேப்டன் தோனியும் எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 8 பந்தில் அவர் 21 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 208 ரன்களை எடுத்துள்ளது.
209 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் பரத் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.வார்னர் (19),பரத் (8),
மிட்சல் மார்ஷ்(25), ரிஷாப் பண்ட்(21) இவர்களை தவிர அனைவரும் ஒற்றை இழக்க ரன்களில் வெளியேறினர்.
டெல்லி அணியால் 20 ஓவர் முடிவில் 117 ரன்களை மட்டுமே எடுத்து அணைத்து விக்கட்டுகளையும் இழந்தது.இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.அதிகப்பட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலி 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
