Connect with us

ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம்.. இவ்ளோ ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிறுவனம்.. பிசிசிஐ ஷாக்..!

2021 ipl

Sports

ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம்.. இவ்ளோ ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிறுவனம்.. பிசிசிஐ ஷாக்..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மற்றும் டிஜிட்டல் உரிமம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல் போட்டிகளை கடந்த 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்யும் உரிமைக்கான ஏலம் கடந்த 12-ஆம் தேதி முதல் நடைப்பெற்று வந்தது. இதனையடுத்து 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ரூ.23,575 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்துக் கொண்டது.

அதே போல் டிஜிட்டல் ஒளிப்பரப்பு உரிமத்தை 23,758 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மொத்தமாக ஐபிஎல் உரிமம் ரூ.48, 390 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதோடு ஐபிஎல் வரலாற்றில் இந்த தொகை புதிய உச்சம் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட் அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாக கூறினார். அதோடு ஐ.பி.எல். மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு பல்வேறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பை அடிமட்ட அளவில் இருந்து வலுப்படுத்துவோம் என கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Sports

To Top